Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் சண்டக்கோழி 2 இசை வெளியீடு தேதி அறிவிப்பு

சண்டக்கோழி 2 படத்தில் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை விஷால் வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் முன்னதாக வெளியான துப்பறிவாளன், வில்லன் மற்றும் இரும்புத்திரை போன்ற படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தது. வில்லன் படத்தின் மூலம் விஷாலுக்கு கேரளாவிலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் இவருடைய அடுத்த படத்திற்காகவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2005இல் வெளியான 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. முந்தைய பாகத்தில் நடித்த சில கதாபாத்திரங்களையும், புது கதாபாத்திரங்களையும் இணைத்து வித்தியாசமான ஆக்சன் படத்தை லிங்குசாமி உருவாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் அக்டொபர் 18ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை விஷால் வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் 24ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 'கம்பத்து பொண்ணு' பாடலை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு வரும் செப்டம்பர் 24இல் படத்தின் மொத்த பாடல்களையும் படக்குழு வெளியிட உள்ளது.

 

விஷாலின் சண்டக்கோழி 2 இசை வெளியீடு தேதி அறிவிப்பு