Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனுஷ் தயாரிப்பில் நாயகனாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வட சென்னை படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலை வைத்து புதுப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.

'கதாநாயகன்' படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி, ராட்சசன், இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்து வரும் 'ராட்சசன்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் அடுத்ததாக புதுமுக இயக்குனரான வெங்கடேஷ் இயக்கத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் அடுத்ததாக தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'காலா' படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வட சென்னை' படத்தினை தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலை வைத்து புதுப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் கூறுகையில் 'நான் தனுஷ் தயாரிப்பில் நடிக்க உள்ளது உண்மை தான், ஆனால் இந்த படம் குறித்து இப்போது கூற முடியாது. அதனை தனுஷ் விரைவில் வெளியிடுவார்' என்று அவர் தெரிவித்துள்ளார்.  

தனுஷ் தயாரிப்பில் நாயகனாக நடிக்க உள்ள விஷ்ணு விஷால்