Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் கூட்டணியில் இணையும் விஷ்ணு விஷால்

vishnu vishal new movie project

விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் தகவலை இன்று வெளியிடுவதாக அவரது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவரது புது படம் 'வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்' படத்தினை இயக்கிய இயக்குனர் எழில் உடன் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஷ்ணு இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

இந்த படத்தினை ஈசன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தூசிஷ்யத், அபிராமி இணைந்து தயாரிக்கவுள்ளார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக பெத்துராஜ் நடிக்கவுள்ளார். இவர்களுடன் இணைந்து காமெடி நடிகன் யோகிபாபு நடிக்கவுள்ளார். விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் இப்படத்தில் பலரும் முதல் முதலாக விஷ்ணுவுடன் இணைந்துள்ளனர். 

 படத்திற்கான பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் மூலம் நல்ல வரவேற்பினை பெற்ற விஷ்ணு இந்த புது படத்திலும் நல்ல வரவேற்பினை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.          

வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் கூட்டணியில் இணையும் விஷ்ணு விஷால்