Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை பிடித்த விசுவாசம் பர்ஸ்ட் லுக்

விசுவாசம் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலே கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விசுவாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அடுத்த சில மணிநேரங்களிலே தல ரசிகர்கள் போஸ்டர் அடித்தும் விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். தற்போது கூகுள் ட்ரெண்டிங்கில் 'Viswasam', 'Viswasam First Look' என்ற இரண்டு வார்த்தைகளை இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தேடி வருவதால் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல் வந்த நிலையில் தற்போது வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதனை உறுதி படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இரண்டு தோற்றங்களில் காணப்படுகிறார். இது தவிர இந்த போஸ்டரில் நகர் புறத்தில் அண்ணன் கதாபாத்திரமும், கிராம பின்னணியில் தம்பி கதாபாத்திரமும் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் தம்பிக்கு யார் ஜோடி என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. ஆனாலும் தம்பிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் தல தீபாவளிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு ரசிகர்களுக்கு டிவிஸ்ட் வைத்துள்ளது.

கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை பிடித்த விசுவாசம் பர்ஸ்ட் லுக்