Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விநாயகர் சதுர்த்தியில் விசுவாசம் பர்ஸ்ட் லுக் - சர்கார் டீசர்

வரும் விநாயகர் சதுர்த்தியில் ரசிகர்களுக்கு விசுவாசம் மற்றும் சர்கார் படங்களின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகவுள்ளது.

செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வெள்ளத்தால் நாடே தவித்து கொண்டிருப்பதால் நாடு முழுவதும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட இயற்கை வழிவிடுமோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் விநாயகர் சதுர்த்தியில் சிவகார்த்திகேயனின் சீம ராஜா, சமந்தாவின் யு டர்ன் மற்றும் தனுஷின் வட சென்னை போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கும் படக்குழு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படம் அரசியலை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியில் சர்கார் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இது தவிர அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழு வெளியிட உள்ளது. அசல் படத்திற்கு பிறகு அஜித் இரு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டி இமான் இசையமைத்து வரும் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

விநாயகர் சதுர்த்தியில் விசுவாசம் பர்ஸ்ட் லுக் - சர்கார் டீசர்