Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் யோகிபாபுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா

யோகி பாபு மற்றும் மனிஷா யாதவ்வின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகராக யோகி பாபு நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் இவருடைய நடிப்பில் 10 படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டில் இது வரையில் 14 படங்கள் வெளியாகியுள்ளது. இவருடைய காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக சர்கார், விசுவாசம், 100% காதல், குப்பத்து ராஜா, ஜெயிக்கிற குதிரை, சிலுக்குவார் பட்டி சிங்கம், கொரில்லா, அடங்காதே, சதுரங்க வேட்டை 2, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இது வரை காமெடி நடிகராக வளம் வந்த யோகி பாபு அடுத்ததாக இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு 'கூர்க்கா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகியதாக யோகி பாபுவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை மனிஷா யாதவை திருமணம் செய்வது போன்று உள்ளது.

ஆனால் இந்த புகைப்படம் யோகி பாபு நடித்து வரும் 'சண்டி முனி' படத்தின் புகைப்படம் ஆகும். இந்த படத்தில் நடராஜ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். எஸ் செல்வகுமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு ரிஷால் சாய் என்பவர் இசையமைத்துள்ளார். ஹாரர், காமெடி கலந்த பேய் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை சிவம் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் யோகிபாபுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா