Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் பியார் பிரேமா காதல் இயக்குனருடன் இணையும் யுவன்

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு மீண்டும் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் எலன் கூட்டணி இணைந்துள்ளது.

கிரகணம் படத்தை இயக்கிய எலன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த படத்தினை யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் இந்த படத்திற்கு பணியாற்றியிருந்தார்.

இவருடைய இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பிக்பாஸ் போட்டியாளர்களான ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோரது நடிப்பில் காதலை மையமாக வைத்து வெளியான இந்த படம் நல்ல வசூலையும் பெற்று தந்தது. இந்த படம் வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை இந்தியிலும் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியில் ரீமேக் ஆகும் இந்த பத்தினையும் இயக்குனர் எலன் இயக்குகிறார். இந்த படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் எலனுக்கு கார்  ஒன்றை பரிசாக வழங்கினார். தற்போது யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் எலன் கூட்டணி மீண்டும் அடுத்த படத்திற்கு ரெடியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பினையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குனர் எலனின் அடுத்த படத்தையும் யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

மீண்டும் பியார் பிரேமா காதல் இயக்குனருடன் இணையும் யுவன்