பியார் பிரேமா காதல் இயக்குனருக்கு தயாரிப்பாளராக யுவனின் அன்பு பரிசு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 17, 2018 18:13 ISTபொழுதுபோக்கு
கமல் ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைஸா ஆகியோரது நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் படம் 'பியர் பிரேமா காதல்'. இந்த படத்தினை இளம் இயக்குனரான இளன் என்பவர் இயக்கியுள்ளார். இன்றைய காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் கதைகளை சுவாரிஷ்யமாக தன்னுடைய இரண்டாவது படத்தின் மூலம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்து விட்ட நிலையில் வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் இர்பான் மாலிக் மற்றும் ராஜ ராஜன் ஆகியோர் இணைந்து படத்தின் இயக்குனருக்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளனர்.
இது குறித்து இயக்குனர் கூறுகையில் "இந்த காரை விட, எனக்கு வாய்ப்பளித்து, இந்த படத்தில் எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்த தயாரிப்பாளர்களின் அன்பு தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் இளன், முன்னதாக நடிகர் கிருஷ்ணா, சந்திரன் ஆகியோரது நடிப்பில் வெளியான 'கிரகணம்' என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்திலே ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டுள்ள இந்த படத்திற்கு ராஜா என்பவர் ஒளிப்பதிவு அமைத்துள்ளார்.