Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா

yuvan shankar raja officially joined in s uriya 36

நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு தற்போது வரை கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 36 வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக உள்ளனர். சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா