Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கபட்ட 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு

2g scam final judgement

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது அதிகளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிஐ களமிறங்கியது. இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆர்.ராசா உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விசாரணை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதனை அடுத்து தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

 வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் டிசம்பர் 21-இல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று  மூன்றாவது முறையாக  தீர்ப்பு வழங்கும் தேதியை நீதிபதி சைனி தள்ளி வைத்தார். அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நாடே ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த 2ஜி முறைகேட்டின் தீர்ப்பை 10:50 மணிக்கு வாசித்தார். இந்த 2ஜி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இந்த 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு முறையாக வழங்கவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு திமுகவினர் உற்சாகத்துடன் தற்போது கொண்டாடி வருகின்றனர். இது குறித்து 'அநீதி வீழும் அறம் வெல்லும்' என்று திமுக தலைவர் கருணாநிதி கைப்பட எழுதிய கருத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கபட்ட 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு