கொங்கு நாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 11, 2018 18:24 ISTPolitics News
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த நாள் முதல் மிகவும் சுறுசுறுப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து வருகிறார்.
இன்று ஈரோட்டிற்கு சென்று அதன் சுற்றுவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளார். கமல்ஹாசன் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாரின் நினைவு இல்லத்தையும் பார்வையிட்டார். பின்னர் ஈரோட்டில் செய்தியாளகர்ளின் சந்திப்பில் பத்திரிகையாளரின் அனைத்து கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார்.
இதில் காவேரி பிரச்சனைக்கு தமிழகத்தின் மத்திய அமைச்சர் ராஜினாமாவை பற்றி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகளை மன்னித்ததாக கூறியது மனிதநேயத்தின் அடையாளம், எனினும் நமது கோரிக்கை சட்டத்தின் தளர்வே என்றும் கிறிஸ்துவ அமைப்பிடம் இருந்து நிதி உதவி மிக நகைச்சுவையான ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிறகு தற்பொழுது நடக்கும் அரசின் செயல்கள் சரியில்லாத காரணத்தினால் அதனை சரி செய்யவே தமது அரசியல் பயணம் தொடங்கப்பட்டது மற்றும் தங்களது கோரிக்கையான நீர் வளங்களை சுத்தம் செய்து காப்பதுற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரவேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்கள் அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள தனது தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார்.