Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பாஜாகவின் தேர்தல் வெற்றிக்கு உதவிய கேம்பிரிட்ஜ் அனாலட்டிக்கா

பாஜகவின் 4 தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா உதவி செய்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் இந்தியா, நைஜீரியா, கென்யா, அர்ஜென்டினா போன்ற உலகம் முழுவதும் 200 நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்துள்ளது. இந்நிறுவனம் பொது மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் தளத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி உள்ளது. இதன் மூலம் பல்வேறு தேர்தல்களில் முறைகேடாக செயல்பட்டுள்ளது.

இது தற்போது பெறும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதனால் பேஸ்புக் பாதுகாப்பானதாக இல்லை என குற்றசாட்டு முன்வந்துள்ளது. மேலும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. இந்த குற்றசாட்டை முதலில் பாஜக, காங்கிரஸ் கட்சி மீது வைத்தது. தன்னுடைய டிவிட்டர் கணக்கை பிரபலப்படுத்த ராகுல்காந்தி இந்நிறுவனத்தின் உதவியதாக குற்றசாட்டு அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த முறைகேட்டில் தற்போது பாஜக கட்சிதான் பெறும் பங்கு வகித்துள்ளது. நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்தியா கிளையான ஓவலேனோ பிசினெஸ் இன்டலிஜென்ஸ் (ovleno business intelligence) நிறுவனத்திற்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா இந்திய கிளையின் சிஇஓ ஒப்புக்கொண்டுள்ளார். இதனை உறுதி படுத்தும் விதமாக அமெரிக்காவின் பேஸ்புக் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். 2014-இல் நடந்த தேர்தலில் உதவியதற்காக நன்றி கடன் செலுத்தவே இந்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் லிங்க்டின் (LinkedIN) பக்கத்தில் நான்கு வெவ்வேறு தேர்தலில் பாஜகவிற்கு உதவி செய்து அதனை வெற்றி பெற செய்துள்ளதாக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பாஜக இந்நிறுவனத்தின் உதவியுடன் பொய்யான வெற்றியை கண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாஜாகவின் தேர்தல் வெற்றிக்கு உதவிய கேம்பிரிட்ஜ் அனாலட்டிக்கா