தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் உலக நாயகன் சந்திப்பு
வேலுசாமி (Author) Published Date : Feb 19, 2018 14:18 ISTPolitics News
ரசிகர்கள், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதை காண ஆவலுடன் இருக்கின்றனர். இருவரும் அரசியல் பயணத்தை தொடங்குவதற்கான தீவிர முயற்சிகளை தனது ரசிகர் மன்றத்தின் மூலம் கையாண்டு வருகின்றனர். இதில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நாளை அப்துல்கலாம் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
இதில் நேரடியாக மக்களை தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சந்திக்க உள்ளார். மேலும் தனது கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் அவர் முன்னதாக தெரிவித்தார். இதற்காக கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சமீபத்தில் சந்தித்தார். இதனை தொடர்ந்து தற்போது தேமுதிக தலைவரான விஜயகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை தற்போது சந்தித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியையும், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் சந்தித்துள்ளார். இதில் விஜயகாந்தை சந்தித்தது குறித்து பேசிய கமல்ஹாசன் "அரசியலில் மூத்த தலைவர் என்ற முறையில் அரசியலை சந்திக்கும் முன் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை சந்தித்து வெகு நாட்கள் ஆகியுள்ளதால் அவரிடம் நலம் விசாரித்தேன். அவரும் நீங்க அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை வாழ்த்தினார். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றியை நிலைநாட்டுவேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.