Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகரை உதறிதள்ளிய கமல் ஹாசன் வைரல் வீடியோ

kamal haasan viral video

நடிகர் கமல் ஹாசன் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் நடிகர் ரமேஷ் அரவிந், கமல் ஹாசன், கவுதமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வரும் கமல் ஹாசனுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பின்னர் ரசிகர் ஒருவர் அவரை தொட்டு காலில் விழ முயற்சிக்கிறார். ஆனால் கமல்ஹாசன் மற்றும் உடன் இருந்த போலீசார் இருவரும் அந்த ரசிகரை தள்ளிவிட்டுள்ளனர். இந்த காட்சி தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கமல் ஹாசன் தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. 

ஆனால் சமூக வலைத்தளங்களில் கமல் ஹாசன் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்து வருகிறது. நடிகர் கமல் ஹாசன் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார் அதற்கான முயற்சிகளில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்த வீடியோ வெளிவந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்னால் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.   

ரசிகரை உதறிதள்ளிய கமல் ஹாசன் வைரல் வீடியோ