திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் மோசம் - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு
புருசோத்தமன் (Author) Published Date : Aug 07, 2018 16:46 ISTPolitics News
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து உடல்நிலையில் பின்தங்கி வந்த தலைவர் கருணாநிதிக்காக காவேரி மருத்துவமனை உயர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாமல் உள்ளது. இதனால் அவர் உடல்நலம் தேறி வருவதற்காக அவரது தொடர்கள் மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "கடந்த சில மணிநேரங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மோசமான சூழநிலைக்கு சென்றுள்ளது. எங்களால் முடிந்த தீவிர சிகிச்சை அளித்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் அவரது செல்கள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன. இதனால் அவர் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்" என மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை கண்டு தொண்டர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.