Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திரிபுரா முதல்வரின் சர்ச்சை கருத்தை கண்டிக்க உள்ள பிரதமர் மோடி அமித்ஷா

திரிபுரா முதல்வர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதனை கண்டிக்கும் விதமாக தற்போது அவருக்கு பிரதமரிடம் அழைப்பு வந்துள்ளது.

திரிபுராவில் மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் டேப் பொறுப்பேற்றதில் இருந்து அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். முதலில் மகாபாரத காலத்திலே இன்டர்நெட் பயன்பாடு இருந்ததாக தெரிவித்து சர்ச்சையில் மாட்டி கொண்டார். இந்த சர்ச்சையான கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வந்த நிலையில் சமீபத்தில் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய்க்கு அழகி பட்டம் கொடுத்தாங்க சரி..டையானாவுக்கு எதுக்கு அழகி பட்டம் என்று வேடிக்கையாக தெரிவித்தார்.

இந்த கருத்திற்கும் நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வந்தனர். ஆனால் இந்த பேச்சில் அவர் அழகு சாதன பொருட்களின் பயன்பாடும், அதனால் ஏற்பட்ட விளைவு குறித்தும் பேசியதால் அவருக்கு மக்களிடம் சில ஆதரவுகள் கிடைத்தது. இதன் பிறகும் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் திரிபுராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் பிப்லாப் டேப் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர் "அரசு வேலையை தேடு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் நேரத்தை வீணடிக்காமல் பீடா கடை வைத்தோ, கால்நடைகளை வளர்த்தோ சம்பாதித்து கொள்ள வேண்டும். அரசு வேலைக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்காமல் இது போன்ற சிறு தொழில்களை துவங்க வேண்டும். பிரதமரின் முத்ரா திட்டத்தில் இணைந்து கடன் பெற்று கால்நடை வளர்ப்பது போன்ற தொழில்களை துவங்கலாம். தற்போது ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 75 ரூபாய் கடன் பெற்று தொழில் துவங்கினால் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சானது இளைஞர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாட்டில் வேலை இல்லாமல் அலைந்து திரிந்து அரசு வேலைக்காவது செல்லலாம் என படித்த முடித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு தேர்வுகளுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திரிபுரா முதல்வர் இளைஞர்களை இழிவு படுத்தும் விதமாக சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த சர்ச்சை கருத்து தற்போது பாஜகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவினர் இது போன்ற கருத்துக்களை பதிவு செய்வது முதன் முறை அல்ல, பாஜகவை சேர்ந்த பிரதமர் உள்பட அமிதாஷா உள்ளிட்ட பலர் இந்த சர்ச்சையான கருத்துக்களில் சிக்கியுள்ளனர். இதன் பிறகு தற்போது திரிபுரா முதல்வரை கண்டிக்கும் விதமாக வரும் மே 2-ஆம் தேதி பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்திக்குமாறு அழைப்பு வந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

திரிபுரா முதல்வரின் சர்ச்சை கருத்தை கண்டிக்க உள்ள பிரதமர் மோடி அமித்ஷா