பன்னீர் செல்வத்துக்கு நான் ஜெயலலிதா மகள் என்பது தெரியும் - அம்ருதா
புருசோத்தமன் (Author) Published Date : Nov 28, 2017 12:41 ISTPolitics News
நேற்று தமிழகத்தை பரபரப்பாகிய ஒரு வழக்கு சுப்ரிம் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நான் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூரை சேர்ந்த அம்ருதா தெரிவித்துள்ளார். மேலும் நான் ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்க மறைந்த ஜெயலலிதா உடலை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகூர் மற்றும் தீபக்குப்தா ஆகியோர் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் கர்நாடகா நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை முறையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் அளித்த உத்தரவில் "தத்தெடுக்கபட்ட குழந்தைகள் தங்களது உண்மையான பெற்றோரின் வாரிசு உரிமையை அரசியல் சட்ட பிரிவு 32-ன் படி உரிமை கோரலாம். இதேபோல் இந்திய நாட்டின் குடிமகனுக்கு தனது உண்மையான அடையாளத்தை அறிந்து கொள்ள சட்டம் 21-ன் படி உரிமை இருக்கிறது. எனவே உங்களது உரிமையை கர்நாடகா நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை முறையிடலாம்." என்று தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அம்ருதா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் "எனக்கு ஜெயலலிதா மகள் என்பது கடந்த மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மறைத்து வளர்க்கப்பட்டேன். நான் ஜெயலலிதாவை என்னுடைய பெரியம்மா என்று தான் நினைத்திருந்தேன். என்னுடைய உறவினர்கள் ஜெயலலிதா தான் உன்னுடைய தயார் என தெரிவித்தனர். நான் ஜெயலலிதாவின் மகளாக 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவின் தயார் என்னை 3 மாத குழந்தையாக இருக்கும்போதே என்னுடைய தாயார் சைலஜாவிடம் தத்து கொடுத்துவிட்டார். என்னுடைய தாயார் சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி ஆவார். என்னுடைய தந்தை சாரதி கடந்த ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை உறவினர் ஜெயலட்சுமியும் பெங்களூரில் உள்ள மற்றொரு உறவினர் லலிதாவும் தெரியப்படுத்தினர்.
நான் ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்கவே டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு வழக்கு தொடர்ந்தேன். கர்நாடக நீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். நான் பலமுறை தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறேன். அவருக்கு நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தெரியும். என்னிடம் அவர் பலமுறை நீ உயிரோடு இருந்தால் போதும் இங்கிருந்து சென்றுவிடு என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவருக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் தான் நான் தெரிவிக்கவில்லை. இப்போது அவர் தான் என்னுடைய தாய் என்பதை நிச்சயமாக நிரூபிப்பேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.