சமீபத்திய செய்தி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 07, 2018 11:11 ISTPolitics News
உடல் நல குறைவால் கடந்த 10 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சற்றுமுன் வந்த தகவல்படி , திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதனால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் முக்கிய குடுமப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த வாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு வந்த போது, தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்த நிலையில், அவரின் உடல்நிலை முன்னெற்றம் அடைந்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் நேற்று திடீரென்று கருணாநிதிக்கு உடல்நலம் சற்று பின்தங்கியதால் திமுக தொண்டர்கள் மன வேதனையுடன் காவேரி மருத்துவமனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தகவல் அறிந்த சில மணிநேரத்திலே காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. மிகுந்த மனக்கவலையுடன் கருணாநிதி நலம்பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது கருணாநிதி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்போது கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி மற்றும் திமுக எம்.பி கள் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
#Karunanidhi #KarunanidhiHealth #KauveryHospital