திரையரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விளம்பரம் பொதுமக்கள் அதிர்ச்சி
வேலுசாமி (Author) Published Date : Apr 21, 2018 16:00 ISTPolitics News
தற்போதைய தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர் ஜெயிலுக்கு சென்ற பிறகு அஇஅதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பின்னர் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். சேலம் மாவட்டம், எடப்பாடியில் சிலுவம்பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து அரசியலில் நுழைந்து தற்போது தமிழ்நாட்டை முதலமைச்சராக 2016-ஆம் ஆண்டு முதல் ஆண்டு வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருப்பதால் மக்கள் முதலமைச்சர் இருப்பதையே மறந்து விட்டனர். ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மக்கள் நினைவு கூறும் வகையில் திரையரங்குகளில் ஒரு விளம்பரம் ஒன்று திரையிடப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார்.
பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்த பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்த பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். இந்த விளம்பரத்தை கண்டு திரையரங்கே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளது. இனி நான் தியேட்டருகே போகல டா என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்