Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு முதல் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளார்.

இன்று உலக சுற்றுசூழல் தினத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுப்புற சுகாதாரம், சீர்கேடு காரணிகள் குறித்து பல கருத்துகள் வாதாடப்பட்டது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு முதல் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளார்.

இது குறித்து 110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை வாசித்ததாவது "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய ஆய்வாளர் குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வாளர் குழு ஒரு முறை மட்டும் பொது மக்கள் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களினால் ஏற்படும் சீர்கேடுகளை கண்டறிந்து அவற்றை தடை செய்ய ஆலோசனை வழங்கியது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துமாறு ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் அபாயம் அறியாமல் மக்காத பிளாஸ்டிக் பைகளை தூக்கி எரிவதால் நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் மாசுபாடு அடைவதுடன் சுற்றுப்புறமும் சீர்கேடு அடைகிறது. நிலத்திற்குள் செல்லும் மழைநீரையும் பிளாஸ்டிக் பைகள் தடுப்பதால் நிலத்தடி நீர் உயர்வும் பாதிப்படைகிறது. இப்படி பிளாஸ்டிக் பைகள் நீர்நிலைகளில் தேங்கும் போது கொசு உற்பத்தியும் அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் அதிகமாகின்றன.

இதனால் பொது மக்கள் முதல் விலங்கினங்கள் கால்நடைகள் வரை பாதிக்கப்பட்டு ஏராளமான உயிரிழப்புகளும் நிகழ காரணமாக அமைகிறது. இதனால் வரும் 2019 ஜனவரி 1முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், சேகரிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு இயற்கையான சுற்றுசூழலை உருவாக்க இந்த பிளாஸ்ட்டிக் தடையை பொது மக்களும், வணிகர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்." என்று அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தடை செய்யப்படும் பொருட்களில் மக்காத பிளாஸ்டிக் தட்டுக்கள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், நீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுக்கள், பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கோடி போன்றவையும் இதற்கு மாற்றாக துணிப்பை, காகித உறை, மண்குடுவை, வாழை இலைகள், பாக்குமட்டை, தாமரை இலைகள் போன்றவற்றை உபயோகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு உபயோகப்படுத்த படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்களிக்க பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை