நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி
வேலுசாமி (Author) Published Date : Apr 11, 2018 11:27 ISTSports News
நேற்று பலத்த எதிர்ப்புகளுக்கு ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் மத்தியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இதனை சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டதால் இந்த இலக்கை சுலபமாக அடைந்து அணியை வெற்றிபெற செய்தனர்.
சென்னை அணி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோதிய இரண்டு ஆட்டத்திலும் அபார வெற்றி அடைந்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்களும் சென்னை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் நடிகர் டிஆரை போன்ற எதுகை மோனை வசனத்துடன் தனது மகிழ்ச்சியினை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் "மெட்ராஸ்ல இருக்குது கிண்டிநீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டிநீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ போயிறுவியா என் ஏரியாவ தாண்டிசெம மேட்ச் மாமா.." என்று பதிவு செய்துள்ளார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ட்வீட் கண்டிப்பாக டிஆர் தான் போட்டிருக்க வேண்டும் என்று கேலியுடன் பதிவு செய்துள்ளது.