கேரளா வெள்ளப்பெருக்கால் 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு - கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் வருத்தம்
வேலுசாமி (Author) Published Date : Aug 20, 2018 10:28 ISTSports News
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையில் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவில் தற்போது வரை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மீட்பு குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களை மீட்பதற்கு சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
ஆனால் தற்போது வரையிலும் முழுவதுமாக பொது மக்கள் மீட்கப்படவில்லை. சூழ்நிலை மோசமாக இருப்பதால் மீட்பு குழுவினர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இது வரை ஏற்ப்பட்ட பொருட்சேதங்கள் உயிரிழப்புகள் முழுவதுமாக கணக்கிடவில்லை. இதனால் கேரளாவின் நிவாரண பணிக்கு உதவ நாடு முழுவதும் ஏராளமான தன்னார்வலர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் முன்வந்துள்ளனர். தற்போது பிரதமரும் 500 கோடி நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலமும் 25 கோடி அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க வீரரான ஏபி டீ வில்லியர்ஸ் கேரளாவில் ஏற்ப்பட்ட உயிரிழப்பு மற்றும் பொது மக்களின் நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவருடைய டிவிட்டரில் "கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். கேரளாவில் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை 100பேர் உயிரிழந்துள்ளனர். இந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.