Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டாவது டெஸ்ட் தொடரில் அஸ்வின் உலக சாதனை

ashwin world record

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நான்காவது நாளாக இன்று நடந்தது. அதன் முதல் இன்னிங்சில் இலங்கை 205, இந்தியா 610/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி தொடங்கியது. நான்காவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 166 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 2-இல் பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. கிரிக்கெட் வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இதுவரை 54 டெஸ்ட் தொடரில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த தொடரில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா வீரர் டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்ட் தொடரில் அஸ்வின் உலக சாதனை