நீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 26, 2018 09:17 ISTSports News
இந்தியாவில் பெரும்பாலான நீச்சல் குளங்களில் தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகப்படியான க்ளோரின் கலப்பதினால் தோல் பிரச்சனைகள், கண் எரிச்சல், முடி கொட்டுவது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீச்சல் குளத்தில் தேவையான அளவைவிட அதிகமாக க்ளோரின் கலந்தால் தோல் கருமையாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இதனால் சீக்கிரம் தோல் வறட்சி ஏற்பட்டு தோல் நோய்க்கு வழிவகுக்கும். க்ளோரின் - பொதுவாக தண்ணீரில் உள்ள கிருமிகளை கொல்வதற்கும், தண்ணீரை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள உபயோக படுத்துகிறார்கள். இதனால் தண்ணீரின் இயற்கையான குணங்களை கெடுப்பதுடன் , அதிகநேரம் தண்ணீரில் இருப்பதற்கு பாதுகாப்பற்றது.
இவ்வகையான நீச்சல் குளத்திலோ அல்லது க்ளோரின் உபயோக படுத்திய தண்ணீரில் குளித்தால் கண்டிப்பாக தோலின் தன்மை மாறுவதனுடன் தலை முடி கொட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் மிக குறைந்த அளவு க்ளோரின் கலந்து இருந்தால் ஓரளவிற்கு பயம் இல்லாமல் ஒரு மணி நேரம் வரை குளிக்கலாம். நீச்சல் குளத்தில் அதிக க்ளோரின் கலந்து இருக்கிறார்களா என்பதை அறிவது சுலபம். நீச்சல் குளத்தில் இறங்கி ஐந்து நிமிடம் கழித்துஉங்களது தோலை மெதுவாக தேய்த்து பார்க்கவும், அதிக க்ளோரின் இருந்தால் மிக பிசுபிசுப்புடன் தோல் வலிக்கும். இதைவைத்து நீங்கள் வெளியேறலாம் அல்லது தேவையான நேரம் மட்டுமே குளிக்கலாம்.
முடிஉதிர்வதை தடுக்க நீச்சல் குளத்தில் குளிக்கும் முன் தேங்காய் எண்ணையை தேவையான அளவிற்கு தலை முடிக்கு உபயோக படுத்திய பின் நீச்சல் தொப்பியை அணிவது அவசியம். மேலும் உடம்பில் காயம் ஏதேனும் இருந்தால், நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்கவும். ஒருசில பண்ணை வீடுகளில் மற்றும் தனியார் ரிசார்ட்களில், வாடிக்கையாளர்கள் வந்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்புகிறார்கள், இதில் க்ளோரின் கலப்பதில்லை. நாம் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன் குளித்துவிட்டு இறங்கினால், இது போன்ற நீச்சல் குளத்தில் அதிக நேரம் நீச்சல் செய்யலாம் மற்றும் இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். பிறகு, இந்த தண்ணீர் செடிகளுக்கு பயன்படுத்த வெளியேற்றி விடுகிறார்கள்.
எந்த ஒரு செயலிலும் கெமிக்கல் பயன்படுத்துவதை தவிர்ப்பது, ஆரோக்கியத்திற்கு நல்லது.