டெல்லி அணிக்கு துணையாக நின்று இறுதி வரை போராடுவேன் - கவுதம் காம்பீர்
வேலுசாமி (Author) Published Date : Apr 25, 2018 17:32 ISTSports News
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் டெல்லி அணி மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி ஒரு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் தற்போது டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கௌதம் காம்பீர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து டெல்லி டெர் டெவில்ஸ் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் வரும் 27-ஆம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. கவுதம் கம்பீர் மாற்றப்பட்டதற்கு அவருடைய ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.
இது குறித்து கவுதம் கம்பீர் தனது டிவிட்டரில் "கேப்டன் மாற்றப்பட்டது உண்மை தான். நான் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டேன். இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவு. இதற்கு பயிற்சியாளரோ மேல் அதிகாரிகளோ காரணமில்லை. என்னால் டெல்லி அணியை முன்னின்று நடத்த முடியவில்லை. ஆனால் டெல்லி அணிக்கு துணையாக நின்று இறுதி வரை போராடுவேன். " என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய முடிவிற்கு தற்போது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.