Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஹார்மன்பிரீத்தின் இரண்டு கோல்களால் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஹார்மன்பிரீத்தின் இரண்டு கோல்களால் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் Image Credit: Jagreet Cheema

ஆஸ்திரேலியாவில் உள்ள  கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகள்   நடைபெறுகின்றன.இதில் 6 ஆம் நாளான இன்று ஆண்களுக்கான  ஹாக்கி போட்டியில் இந்திய அணி மலேசியவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தகுதிச்சுற்றில்  இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ள நிலையில், இந்திய அணி, தன் அடுத்த போட்டியில் இங்கிலாந்தை வெல்லும் பட்சத்தில் அட்டவணையில் முதலிடம் பிடிக்கும். மேலும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவும்  அவசியமிருக்காது.  

விறுவிறுப்பாக நடைபெற்ற 3 ஆவது போட்டியில், ஹார்மன்பிரீத் சிங்  ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்தியாவின் முதல் கோலை அடித்தார். பின், இதனை சமன் செய்யும் விதமாக மலேசியா அணியின்  பைசல் சாரி  இரண்டாவது பாதியில் ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.  1-1 என சமனில் இருந்த போட்டியில் 43வது நிமிடத்தில்  ஹார்மன்பிரீத் சிங்  மேலும் ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச்செய்தார். ஆசியாவின் முக்கியமான போட்டியாக இருந்த மலேசியாவை வீழ்த்திய பெருமை, ஹார்மன்பிரீத் சிங்கையே சேரும். 

4 போட்டிகள் கொண்ட தகுதிச்சுற்றில் இந்தியா  முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொண்டது. இந்த போட்டி 2-2 என டிராவில் முடிவுற்றது.  இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-3 என்ற கணக்கிலும் மூன்றாவது ஆட்டதில் மலேசியாவிடம் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி  

மேலும் கமென்வெல்த்தின் ரைபில் (துப்பாக்கி) சுடுதல் 50 ம் பிரிவில், ககன் நரங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் ஏற்கனவே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான 25 ம் ரைபில் போட்டியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அணு சிங் மற்றும் ஹீனா சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

ஹார்மன்பிரீத்தின் இரண்டு கோல்களால் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்