முதல் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 08, 2018 22:49 ISTSports News
கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தற்போது நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதில் டி வில்லியர்ஸ் மற்றும் டு ப்ளஸ்ஸிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
இதில் ஹர்டிக் பாண்டியா அதிகபட்சமாக 93 எடுத்திருந்தார். பின்னர் 3வது ஆட்டத்தில் மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனை அடுத்து நான்காவது நாளான இன்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என வானிலை மையம் அறிவித்ததை தொடர்ந்து இன்று ஆட்டம் தொடரப்பட்டது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 142 ரன்கள் பின் தங்கியிருந்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதனால் தற்போது இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது.