சென்னை அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு கைமாறிய அஸ்வின்
வேலுசாமி (Author) Published Date : Jan 27, 2018 11:28 ISTSports News
இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூடுபிடிக்காத ஐபிஎல் கிரிக்கெட் இந்த ஆண்டு சென்னை, ராஜஸ்தான் ஆணிகளால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளது. இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்திய மண்ணில் களம் காணுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்டத்தில் சிக்கிய சென்னை, ராஜஸ்தான் அணிகள் தற்போது மீண்டுள்ளது. இன்று இந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது. அஸ்வினை தற்போது பஞ்சாப் அணி 7.06 கோடி தந்து விலைக்கு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சன் ரைஸஸ் அணி, ஷிகர் தவானை 5.2 கோடி கொடுத்ததும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரஹானேவை 4 கோடி கொடுத்தும், ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர் ஸ்டார்க்கை 9.4 கோடி கொடுத்ததும், சென்னை அணி டு பிளெஸ்ஸிஸ் 1.6 கோடி கொடுத்ததும், இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்ட்ரோக்ஸ் என்பவரை ராஜஸ்தான் அணி 12.5 கோடி கொடுத்ததும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த க்றிஸ் கெய்லியை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.