முதல் T10 தொடரில் தோல்வியுற்ற சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 16, 2017 21:57 ISTSports News
உலகில் முதல் T10 போட்டி இன்று ஷார்ஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்களான வீரேந்திர சேவாக், அப்ரிடி, இயான் மோர்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. இன்று சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணியும், அப்ரிடியின் பக்ட்டூன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பக்ட்டூன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்து. இதனை அடுத்து மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு களமிறங்கியது. ஆனால் 10 ஓவர் முடிவில் மராத்தா அரேபியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து.
இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் பக்ட்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐந்தாவது ஓவரை அப்ரிடி வீசினார். இதில் முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்டிக் சாதனை படைத்தார். முதல் பந்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ரூசோவ், இரண்டாவது பந்தில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பிராவோ மற்றும் மூன்றாவது பந்தில் அணியின் கேப்டன் சேவாகும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் சிறந்த வீரர் விருது அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரின் மூலம் 10 ஓவர் போட்டியில் ஆர்டிக் விக்கெட் வீழ்த்திய பெருமையை அப்ரிடி தட்டி சென்றார். இந்த தொடருக்கு முன்னதாக பெங்கால் டைகர்ஸ் அணியை கேரளா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.