Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தை பதிவு செய்த சதிஷ்குமாருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 4-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 41 பதக்கங்களை வென்று முதலிடத்திலும், 23 பதக்கங்களை பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை பதிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியா ஒரு தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இந்த  போட்டியில் ஆடவர் 77கிலோ பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு மூன்றாவது தங்கத்தை சதீஸ்குமார் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

தமிழக வீரரின் இந்த சாதனைக்கு நமது இந்தியாவின் குடியரசு தலைவர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "பளுதூக்கும் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீரர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகின்றனர். ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை பெருமைப்படுத்திய தமிழனின் விளையாட்டு நிகழ்வுகள் :

1. பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சப்-ஜூனியர், ஜூனியர் என பல தங்க பதக்கங்களைக் குவித்த அவர், சீனியர் பிரிவுக்கு முன்னேறினார்.

2. 2011இல் பெங்களூருவில் நடைப்பெற்ற தேசிய சீனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

3. 2011இல் தென்னக ரயில்வேயின் எழுத்தர் பணியில் சேர்ந்த இவர், 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றார்.

4. 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 149 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 179 கிலோவுமாக மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி உள்ளார். இசுநாட்சில் 149 கிலோ தூக்கியது புதிய போட்டிச் சாதனையாகும்.

 

ஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து