Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இன்று கிரிக்கெட் உலக சரித்திர நாயகனின் 45வது பிறந்த நாள் விழா

இன்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாள் விழா.

இந்திய கிரிக்கெட்டின் சரித்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார். கிரிக்கெட்டிற்கு குறைந்த வயதில் அறிமுகமான இவர் தன்னுடைய 11வயதில் கிரிக்கெட் உலகிற்கு நுழைந்தார். இவர் தனது 16வது வயதில் கராச்சியில் 1989இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி இவருடைய முதல் டெஸ்ட் போட்டியாகும். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர், ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டை சதத்தை அடித்த வீரர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களை கடந்த ஒரே வீரர் போன்ற சாதனைகளை படைத்துள்ள இவர் 'கிரிக்கெட் கடவுள் (God of Cricket)' என்று அழைக்கப்படுகிறார்.

இவர் கடந்த 2013இல் நவம்பர் 16-ஆம் தேதி கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றார். இவருடைய கடைசி டெஸ்ட் எதிராக 2013 நவம்பர் 13இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டம். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் இவர் 74 ரன்கள் எடுத்திருந்தார். இவருடைய கடைசி ஒரு நாள் ஆட்டம் 2012 மார்ச் 18இல் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம். இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இவர் 52 ரன்களை எடுத்திருந்தார்.

மேலும் இவருடைய கடைசி T20 போட்டி  2006 டிசம்பர் 1இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம். இந்த போட்டியிலும் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது. ஆனால் இந்த போட்டியில் இவரால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என இரண்டு போட்டிகளிலும் வர அடித்த 100 சதங்களில் 53 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 20 போட்டிகள் ட்ரைவில் முடிவடைந்துள்ளது, 23 போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

இவர் மொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக ரிக்கி பாண்டிங் 560 போட்டிகளில் 71 சதங்களை அடித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் இவர் தான் விளையாடிய முதல்  ராஞ்சி, இரானி, துலீப் கோப்பைக்கான போட்டிகளிலே சதமடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் தற்போது வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இவர் 5 சதங்களை அடித்துள்ளார்.

இவருடைய தலைமையில் இந்திய அணி 73 ஒரு நாள் போட்டிகளிலும், 25 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளது. இதில் 23 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. மேலும் இவருக்கு அதிக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய பெருமையும் உண்டு. இதில் அதிகமுறை அதாவது 63 முறை ஆட்டநாயகன் விருதினையும் வென்றுள்ளார். இவருடைய வாழ்க்கையில் 24 வருடங்கள் கிரிக்கெட் உலகில் அர்ப்பணித்த இவர் மொத்தமாக 34, 357 ரன்களை குவித்துள்ளார்.

மேலும் மொத்தமாக 100 சதம் மற்றும் 164 அரை சதங்களை அடித்துள்ளார். இவருடைய ஆட்டத்தில் 27 முறை 90-100 ரன்களுக்கு இடைப்பட்ட ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இன்று கிரிக்கெட் உலக சரித்திர நாயகனின் 45வது பிறந்த நாள் விழா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய கிரிக்கெட் சாதனைகளும், இவர் வென்ற விருதுகளும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை. இவர் மறைந்தாலும் இவருடைய புகழ் ரசிகர்களால் மேன்மேலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். 

இன்று கிரிக்கெட் உலக சரித்திர நாயகனின் 45வது பிறந்த நாள் விழா