தென் ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா இடத்திற்கு மேலே வெடித்து சிதறிய சிறுகோள்
விக்னேஷ் (Author) Published Date : Jun 08, 2018 12:46 ISTTechnology News
சிறுகோள் (Asteroid) என்பன நமது சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றி வரும் சிறு கோள்களாகும். இவை உலகம் மற்றும் பாறைகளால் ஆன தடிமனான அமைப்புடையது. அளவில் வேறுபட்டு காணப்படும் இந்த சிறிய கோள்கள் சூரிய குடும்பத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறது. இதனால் சூரியனை சுற்றிவரும் நமது பூமிக்கு இந்த சிறிய கோள்களால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஒவ்வொரு வினாடியும் கண்காணித்து கொண்டு வருகிறது.
தற்போது உலகில் அதிநவீன கருவிகளும், புது அம்சங்கள் கொண்ட தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த சிறுகோள்களின் (Asteroid) எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் என்னதான் நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்து வந்தாலும் புதியதாக கண்டுபிடிக்கப்படும் இந்த கோள்களின் துல்லியமான விவரங்களை ஆய்வாளர்களால் சேகரிக்க முடிவதில்லை. இதனால் எதிர்பாராத தருணங்களில் திடீரென பல திருப்பங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா இடத்திற்கு மேலே பிரகாசமான நெருப்பு பந்து ஒன்று கண்டிபிடிக்கப்பட்டது. இந்த சிறிய கோளானது வினாடிக்கு 10மைல் என்ற வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தை அடைந்த போது பூமியின் தரைப்பகுதிக்கு மேலே பல மைல் தூரத்தில் சிறு சிறு துண்டுகளாக சிதறடிக்கப்பட்டது. இதனால் பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. வானில் மாலை நேரத்தில் நடந்த இந்த காட்சியை பல ஆய்வாளர்கள் கண்காணித்துள்ளனர்.
பொதுவாக நாசா, புதியதாக சிறுகோளை கண்டுபிடித்த பிறகு இது குறித்து மேலும் தகவல்களை திரட்ட வானியளார்களுக்கு உத்தரவிடும். பின்னர் வானியலாளர்கள் இந்த கோளினால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடுவர். ஆனால் கடந்த சனிக்கிழமை வெடித்து சிதறிய இந்த சிறியகோள் (2018 LA), வெடித்து சிதறுவதற்கு 6அடி முன்னால் இருக்கும் போது மட்டுமே ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அமெரிக்காவின் டக்சன் என்ற இடத்தில் உள்ள 'Catalina Sky Survey' முதலில் கண்டுபிடித்துள்ளது.
அளவில் சிறியதாக இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த சிறிய கொள் வெடித்து சிதறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னால் மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். இன்றைய உலகில் என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்றாலும் இயற்கையை எதிர்த்து துல்லியமான தகவல்களை பெற முடிவதில்லை. ஆனாலும் நமது பூமியை எந்த கோள் அல்லது விண்மீன் நெருங்கினாலும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது சாம்பலாகும் அல்லது சிறு சிறு துண்டுகளாக உடையும். இதனால் பூமிக்கு பேராபத்து நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.