வாட்ஸாப்பில் தவறுதலாக வேறு ஒருவருக்கு மெசேஜ் அனுப்புபவரா நீங்கள் ?
ராசு (Author) Published Date : Nov 11, 2017 23:21 ISTTechnology News
வாட்ஸாப்பில் (WhatsApp) தவறுதலாக வேறு ஒருவருக்கு மெசேஜ் (Message) அனுப்பி விட்டு வருத்தப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பயனுள்ள செய்தி.
வாட்ஸாப்பில் (WhatsApp) நீங்கள் தவறாக எதேனும் மெசேஜ் (Message) அனுப்பி இருந்தால் அதை நீங்கள் முற்றிலும் சுலபமாக அகற்றிவிடலாம் (Delete).
நம்மில் பெரும்பாலானோர் நண்பர்கள் ஒரே பெயர் வைத்து இருந்தால், தவறுதலாக அதே பெயர் உள்ள மற்ற நண்பருக்கு நமது மெசேஜ்ஐ (Message) அனுப்பிவிடுவோம், அவ்வாறு அனுப்பியபின் அதை அகற்ற (delete) முடியாது. நம் மொபைலில் இருந்து மட்டுமே அகற்ற முடியும்.
இதே போல் நாம் தவறுதலாக மெசேஜ் (Message), புகைப்படம் (Photo), வீடியோ (Video) மற்றும் எதை அனுப்பி இருந்தாலும், அதை அகற்ற முடியாது. இது வாட்ஸாப் பயன் படுத்தும் பெரும்பாலானோர்க்கு குறையாகவே இருந்தது.
இப்போது இதற்கு ஒரு விடிவுகாலம் வந்துள்ளது. ஆம், இனி நீங்கள் கவலை பட வேண்டாம். தவறுதலாக எந்த ஒரு மெசேஜ் (Message) அனுப்பி இருந்தாலும் , அதை உடனடியாக உங்கள் மொபைலில் மற்றும் இல்லாமல் , உங்கள் மெசேஜ்ஐ (Message) நண்பர் மொபைலில் இருந்தும் அதை முற்றிலும் அகற்றிவிடலாம்.
இங்கு உள்ள செய்முறையை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.1. உங்கள் இணையத்தை (Internet ON ) செயல்பாட்டில் இருக்கவேண்டும் .2. நீங்கள் அனுப்பிய மெசேஜ்ஐ (Message) இரண்டு வினாடிக்கு தொடர்ந்து தொடவும்.3. உங்கள் வாட்ஸாப்பின் திரையின் மேல் பகுதியில் பல வசதிகள் காண்பிக்க படும், அதில் அகற்றும் (delete) வசதி உள்ள பொத்தானை தொடவும்.4. உங்களுக்கு மூன்று வசதிகள் காண்பிக்கபடும். 1. Delete for me, 2. Cancel , 3. Delete for Everyone5. இதில் நீங்கள் DELETE FOR EVERYONE என்ற வசதியை உபயோகித்தால் , உங்கள் மெசேஜ் உங்கள் மொபைலில் இருந்தும் உங்கள் நண்பர் மொபைலில் இருந்தும் முற்றிலுமாகும், அகற்றப்பட்டுவிடும்.
இதை உங்கள் நண்பர்கள் மொபைலில் பரிசோதித்தித்து பாருங்கள்.
குறிப்பு : Google PlayStore வாட்ஸாப் (Whastapp) அப்ப்ளிகேஷனை அப்டேட்(Update) செய்து இருக்க வேண்டும்.