புதிய வரவான சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 அறிமுகம்
ராசு (Author) Published Date : Mar 25, 2018 12:56 ISTTechnology News
சாம்சங் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட கேலக்ஸி ஜே 7 ப்ரைம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல். இதில் 5.5-இன்ச் அளவிற்கு பெரிய திரையை கொண்டு 3 ஜிபி ராம் வேக (3GB RAM) வசதியுடன் பெரிய வகை மாடல்களின் மற்ற தொழில்நுட்பங்களை கொண்டதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றளவும் விற்பனையில் சாதனை படைத்தது வருகிறது. இந்நிலையில் இந்த மாடலின் இரண்டாம் பாகத்தை சாம்சங் நிறுவனம் இந்த வாரம் தனது இணையத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஜே 7 ப்ரைம் 2 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.புதிய வரவான சாம்சங் கேலக்ஸி ஜே 7 ப்ரைம் 2 மாடலில் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை. ஒரே பெரிய வித்தியாசம், முன்புறம் இருக்கும் கேமராவில் பழைய மாடலில் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா (8MP Selfi Camera) திறனை கொண்டிருந்தது, புதிய மாடலில் 13 மெகா பிக்சல் செல்பி கேமரா (13MP Selfi Camera) திறனை முன்பக்க கேமரா கொண்டுள்ளது. வேறு எந்த மாற்றங்கள் இல்லத்தால் சாம்சங் பெரிய அளவில் விளபரங்கள் செய்து இதை வெளியிடவில்லை என விற்பனையாளர்கள் கூறிகிறார்கள்.தற்பொழுது ஆண்ட்ராய்டில் புதிய இயக்க முறைமையான ஓரியோ (OREA) கேலக்ஸி ஜே 7 ப்ரைம் 2 மாடலுக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது, பழைய கேலக்ஸி ஜே 7 ப்ரைம் மாடலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சந்தையில் தற்பொழுது போட்டி நிறுவனங்களின் வருகையால் சிறிய பட்ஜெட் மொபைலில் சாம்சங் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது, அதற்காகவே தற்பொழுது வெற்றி பெற்ற மாடல்களின் புதிய வரவில் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த கேலக்ஸி ஜே 7 ப்ரைம் 2 மாடலை வெளியிட்டுள்ளது. பழைய மாடலின் விலையான ரூபாய் 13,900 இருக்கும் நிலையில், இதற்கும் அதே விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலின் சிறப்பு அம்சங்களுடன் பழையமாடலின் ஒப்பிடும்போது முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் செல்பி கேமரா (முன் பக்கம்) (8 MP front camera) இருந்தது, புதிய மாடலில் 13 மெகா பிக்சல் செல்பி கேமராவாக (முன் பக்கம்) (13 MP front camera) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஜே 7 ப்ரைம் 2016 & 2018 : 4G LTE5.5-இன்ச் எச்டி தொடு திரை (5.5inches HD Display)ஆண்ட்ராய்டு 7.0 (Android 7.0)எக்சினோஸ் 7870 (Exynos 7870)ஆக்டோகோர் 1.6 Ghz பிராஸசர் (Octa-core 1.6 GHz Cortex-A53) 3 ஜிபி ராம் வேகம் (3 GB RAM)16/32 ஜிபி உள் சேமிப்பு திறன் (16/32 GB Internal Memory)256 ஜிபி வரை எஸ்டி கார்ட் வசதி (256 GB expandable microSD)13 மெகா பிக்சல் கேமரா (பின்பக்கம்) (13 MP Primary camera)வைபை, ப்ளூடூத் 4.1, FM ரேடியோ (Wifi, Bluetooth 4.1v, FM Radio)யுஎஸ்பி விரலி (USB OTG Pen-drive)கைரேகை பாதுகாப்பு சென்சார் (Fingerprint security sensor)3300 mAh பேட்டரி (Li-Ion 3300 mAh battery)