பேஸ்புக்கை தொடர்ந்து வாட்சப்பின் தனியுரிமை பறிபோகும் நிலை
ராசு (Author) Published Date : Apr 02, 2018 15:09 ISTTechnology News
உலகின் புகழ்பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக்கில் (Facebook) உள்ள தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா (cambridge analytica) நிறுவனம் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலுக்காக திருடி உதவியது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்பொழுது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் (WhatsApp) செயலியிலும் பிரச்சனை துவங்கியுள்ளது, இதுவும் உலகளவில் மக்களிடையே புகழ் பெற்ற செயலி.
வாட்சப் செயலியில் ஏற்கனவே நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் என்க்ரிப்ட் செய்யபட்டுத்தான் மற்றவர்களுக்கு அனுப்புவதாக காண்பிக்கப்படும், இதன் அர்த்தம் எந்த சூழ்நிலையிலும் யாரும் தகவல்களை திருட முடியாது என்று அர்த்தம். இதனால் மக்கள் எந்த விதமான வார்த்தைகளையும் டைப் செய்து ஒருவருக்கொருவர் வாட்சப் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் இதற்கும் இப்பொழுது பெரும் ஆபத்து வந்துள்ளது. வாட்சப்பில் உள்ள தகவல்களை எளிதில் திருட முடியும் என்பதை வேறு ஒரு செயலியின் பயன்பாட்டில் அறியப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது.
இந்த செயலியின் பெயர் ச்சாட்வாட்ச் (Chatwatch). இந்த செயலியை உங்களது மொபைலில் இருந்தால், உங்கள் நண்பர்களின் வாட்சப் ஸ்டேட்டஸ், உங்கள் தொலைபேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்களில் யாராவது வாட்சப்பில் இருந்தால் அவர்கள் எத்தனை முறை வாட்சப் செயலியை இன்று பார்த்துள்ளார்கள், ஆன்லைனில் இருக்கிறார்களா அல்லது இல்லையா போன்ற இன்னும் பல தகவல்களை பயன்படுத்தி ஒரு பெரிய ரிப்போர்ட் எடுக்கும் அளவிற்கு இந்த ச்சாட்வாட்ச் செயலி செயல்படும்.
முதலில் இது ஐபோனில் (i-phone) தான் வந்தது, பின்பு அகற்ற பட்டுவிட்டது ஆனால் இன்றும் கூகிள் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் (Android Play Store) உள்ளது. இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதை போல் பல செயலிகள் ஏற்கனவே உள்ளது, பிரச்சனை வரும் போதுதான் நமக்கு செயலிகளை பற்றி தெரிய வருகிறது. எனவே நாம் குறியீடு எண்களை (password) அல்லது மிக முக்கியமான தொழில் சம்பந்தபட்ட தகவல்களை வாட்சப் மூலம் பகிர்வது பாதுகாப்பானவை அல்ல.
வாட்சப்பில் நாம் பரிமாறிக்கொள்ளும் செய்திகளை ச்சாட்வாட்ச் மூலம் எடுக்கும் அளவிற்கு வாட்சப்பின் பாதுகாப்பு தன்மை இருக்கிறது என்றால், எதற்காக நமக்கு " தகவல்கள் மற்றும் உரையாடல்கள் என்க்ரிப்ட் செய்தபின் தான் பரிமாறிக்கொள்ள படுகிறது" "Messages to this chat and calls are nwo secured with end-toend encryption " என காண்பிக்க வேண்டும்? இதற்கான அர்த்தம் புரியவில்லைல். இதன் மூலம், பேஸ்புக்கில் நடந்த திருட்டு வாட்சப்பிலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.