Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சென்னையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்காவில் ஆப்பிள் டிசைன் விருது

கால்சி என்ற புதிய ஐபோன் செயலியை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவில் ராஜா விஜயராமன் என்பவருக்கு ஆப்பிள் டிசைன் விருது வழங்கபட்டுள்ளது.

மெக்கானிக்கல் பொறியியல் துறையை சேர்ந்தவர் ராஜா விஜயராமன், இவருடைய சொந்த மாவட்டம் தேனீ. மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த இவர் கிராபிக்ஸ் திறமையில் கை தேர்ந்தவர், இதனால் ரஜினி படம் உள்பட பல பாடங்களில் கிராபிக்ஸ் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இவர் நீண்ட நாட்களாக ஐபோனை பயன்படுத்தி வருவதால் அதில் உள்ள செயலிகளை ஆராய்ந்து ஐபோன் தலத்தில் தானும் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

இதனால் ஐபோன் தலத்தில் இயங்கி வரும் கால்குலேட்டரை விட புதிய சிறப்பம்சங்கள் உடைய கால்குலேட்டரை உருவாக்க நினைத்து 'Calzy 3' என்ற புதிய அம்சங்கள் கொண்ட கால்குலேட்டரை உருவாக்கியுள்ளார். இவருடைய இந்த புதிய செயலியில் மல்டி டாஸ்க்கிங் (Multitasking), முக பதிவு (Face ID), டச்சு பதிவு (Touch ID) போன்ற புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. Scientific Calculator முறையில் இயங்கும் இந்த கால்குலேட்டர் செயலி, இதர செயலிகளிலும் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர Bookmarks, Saved history போன்ற அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு 'Calzy' என்ற பெயரில் ராஜா உருவாக்கிய இந்த செயலி தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டு 'Calzy 3' என்ற பெயர் மாற்றத்துடன் கிடைக்கிறது. இந்த செயலியானது தற்போது 65 வகையான மொழிகளில் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளர்கள் உபயோகித்து வரும் இந்த செயலி 159ரூபாயில் iOS தலத்தில் மட்டும் கிடைக்கிறது. மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த ராஜா மென்பொருள் துறையில் தனது சொந்த முயற்சியின் மூலம் தாமாக ஒரு செயலியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது இந்த செயலி உலகம் முழுவதும் வெற்றிகரமாக மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் ராஜா விஜயராமனை கவுரவிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் சான் ஜோஸ் என்ற நகரில் நடைபெற்று வரும் ஆப்பிள் மென்பொருள் மாநாட்டில் ஆப்பிள் டிசைன் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. விருது வழங்கப்போவது குறித்து அவருக்கு தெரிவிக்காமல் ரகசியமாக அழைத்து வந்து இன்ப அதிர்ச்சியினை ஆப்பிள் நிறுவனம் ராஜாவுக்கு அளித்துள்ளது. விருது வழங்கப்போவது தெரியாமல் ராஜா, காலா டீஷர்ட்டுடன் மெய்சிலிர்த்து மேடையில் நின்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த இளைஞருக்கு அமெரிக்காவில் ஆப்பிள் டிசைன் விருது