Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

14 மணிநேரமே சுற்றும் மற்றொரு பூமி கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தின் அருகில் உள்ளதால் அதன் வெப்பம் 2000°C அளவில் இருக்கிறது. Dr David Armstrong. photo credit - University of Warwick

நம்மில் பெரும்பாலும் வேற்று கிரக வாசிகளை பற்றி அறிய மிகுந்த ஆவல் இருக்கும், அதற்கு தீனி போடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் பூமியை போன்றே உள்ளது, அதற்கு 'K2-229b' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள பெரிய விஞ்ஞானிகள் ஒரு புதிய கிரகங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதில் இருந்து எந்த வேற்று கிரகவாசிகள் வந்ததாக தெரியவில்லை.

இந்த புதிய கிரகத்தை இந்த மாதத்தில் தான் கண்டுபிடித்தார்கள், அதுமட்டும் இல்லாமல் அந்த கிரகத்தின் மற்ற விசியங்களையும் யூனிவர்சிட்டி ஆப் வார்விக்கில் ( University of Warwick) இருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறியது, "இந்த புதிய கிரகம் பூமியை விட 20% அளவில் பெரியதாக உள்ளது, அதன் நட்சத்திர குடும்பத்திற்கு அருகில் உள்ளதால் அதன் வெப்பம் 2000°C அளவில் இருக்கிறது, நமது பூமி ஒருநாளைக்கு 24 மணி நேரம் சுற்றுவதை இந்த புதிய கிரகம் 14 மணி நேரத்தில் சுற்றுவிடுகிறது மற்றும் நமது பூமியில் இருந்து சுமார் 339 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு 'K2-229b' என்று பெயர்வைத்து இருக்கிறார்கள், அதற்கு ஒரே காரணம் கண்டுபிடிக்க உதவிய தொலைநோக்கியின் பெயர்தான் கெப்ளர் தொலைநோக்கி (K2 telescope).

ஒரு ஒளியாண்டு என்பது சுமார் 9,500,000,000,000 கிலோமீட்டர் தூரம் எனின் 339 x  9,500,000,000,000 என்றால் நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய கிரகத்திற்கு செல்ல முற்பட்டு திரும்பி வருவதற்குள், நாம் பலநூறு வருடங்களை கடந்திருப்போம். இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும், ஏன் இன்னும் வேற்று கிரக வாசிகள் இன்னும் பூமிக்கு வந்தடையவில்லை என்று.

பொதுவாக தொலைதூரத்தில் இருக்கும் கிரங்ககளை கண்டுபிடிக்க சில வித்தியாசமான யுக்திகளை கையாள்வார்கள். இந்த புதிய கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானி டாக்டர் டேவிட் ஆர்ம்ஸ்ட்ரோங் (Dr David Armstrong) மற்றும் அவர்களது குழுவினர்கள் K2 தொலைநோக்கி சாதனத்தை பயன்படுத்தி தள்ளாட்டம் முறையின் (wobble method) மூலம் தொலைதூரத்தில் உள்ள கிரகத்தையும் அதன் மற்ற அம்சங்களையும் கண்டுபிடித்துள்ளனர். 

14 மணிநேரமே சுற்றும் மற்றொரு பூமி கண்டுபிடிப்பு