Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் பல சந்தேகங்களை தீர்க்கும் பேஸ்புக்கின் புதிய இணையதளம்

பேஸ்புக் நிறுவனம் தற்போது யூத் போர்டல் என்ற புதிய தளத்தை இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக உருவாகியுள்ளது.

தற்போதுள்ள குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி செல்போன், லேப்டாம் மட்டுமே இருந்தால் போதும் என்கின்றனர். பல மணிநேரங்கள், நாட்கள் என்றாலும் அதனை கழிக்க சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு விடியோக்கள், இன்டர்நெட் போன்றவற்றை அசராது சாப்பிடாமல் கூட உபயோக படுத்துகின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு வினையாகி விடுகிறது. இப்படி தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து உபயோகப்படுத்துவதால் உடல்நல தீங்கு தருவது மட்டுமல்லாமல் யார் எவெரென்று தெரியாமல் சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்வீட்டர் போன்றவற்றில் பழகும் பழக்கங்கள் அவர்களை தீய வழியில் இழுத்து செல்கிறது.

தற்போது நிகழும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைகிறது. இது தவிர ஒரு நாளில் பல லட்சக்கணக்கான தற்கொலைகளும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பேஸ்புக் நிறுவனம் தனியாக 'Youth Portal' என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளது. இந்த தலத்தில் முக்கியமாக இளைஞர்களுக்கு, பேஸ்புக் என்பது என்ன, அதனை எப்படி உபயோகப்படுத்த வேண்டும், தகாத நபர்களை எப்படி தவிர்க்க வேண்டும், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கையாள்வது எப்படி, ஒருவர் போடும் போஸ்டை யார் அதனை பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி, உங்கள் தனிநபர் தகவலை பாதுகாப்பது எப்படி போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இன்றைய பெற்றோர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு, தனது குழந்தைகளிடம் எப்படி பழக வேண்டும், எப்படி தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் மற்றும் தனது பிள்ளைகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கும் போது அவர்களை நல்ல மனநிலைக்கு கொண்டு வர என்ன செய்வது உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக பல கேள்வி பதில்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. 

க்ளிக் செய்யவும் - 

இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் பல சந்தேகங்களை தீர்க்கும் பேஸ்புக்கின் புதிய இணையதளம்