டிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 14, 2018 12:05 ISTTechnology News
சமுக வலைத்தளங்களில் மிக முக்கியமான வலைத்தளமான டிவிட்டர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரையிலும் டிவிட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை 335 மில்லியனை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற அனைவரும் தெரிவிக்கும் தகவல்கள் பெரும்பாலும் டிவிட்டர் மூலமே ரசிகர்களை சென்றடைகிறது.
சாமானியன் முதல் பணக்காரன் வரை பலதரப்பட்ட மக்கள் உபயோகித்து வரும் டிவிட்டரில், இவர்தானா என்பதனை அறிய சரிபார்க்கப்பட் கணக்கு (Verified Account) என்ற சிறப்பம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பெரும்பாலும் இதன் மூலமே அறியப்படுகின்றனர். ஆனால் சரிபார்க்கப்பட் கணக்கு (Verified Account) என்ற அம்சத்தை பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொது மக்களும் பெற முடியும். இதன் மூலம் சாமானியன் தெரிவிக்கும் தகவல்களும் ஏராளமான மக்களை சென்றடையும். அதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. டிவிட்டரில் வெரிபைட் (Verified) கணக்கை பெற உங்களுடைய கணக்கில் உள்ள தகவல்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். 2. உங்களுடைய கணக்கில் சுயவிவர படம் (profile picture), கவர் படம் (cover photo), பெயர், இணையதளம் (Website) மற்றும் வரலாறு (Bio) போன்றவற்றை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதனை செய்ய வலது புறத்தில் உங்களுடைய கணக்கை க்ளிக் செய்து ப்ரொபைல் (Profile) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து எடிட் செய்து கொள்ளலாம்.3. உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி போன்றவற்றை சரியானதாக கொடுத்து சரிபார்த்து (Confirm) கொள்ள வேண்டும். 4. நீங்கள் உங்களுடைய டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் (Tweets) அனைத்து மக்களுக்கும் (Public) சென்றடைய வேண்டும். இதனால் உங்கள் கணக்கில் உள்ள ட்வீட் பிரைவசி (Tweet Privacy) என்ற ஆப்ஷனை அன்பாக்ஸ் (UnBox) செய்திருத்தல் அவசியம். 5. இதன் பிறகு ட்வீட்டரின், சரிபார்ப்பு தளத்திற்கு (Twitter Verification Site) சென்று கொடுக்கப்பட்ட வடிவத்தை (Form) பூர்த்தி செய்து கொள்ளவும். 6. பிறகு உங்களுடைய தகவல்கள் அனைத்தையும் டிவிட்டர் சரிபார்த்து உங்களுக்கு சரிபார்க்கப்பட் கணக்கு (Verified Account) அம்சம் வழங்கப்பட்டு நீல நிற குறியீடு (Blue Batch) கொடுக்கப்படும்.
குறிப்பு : நீங்கள் உங்களுடைய வணிக நோக்கத்திற்காக இல்லாமல் தனிநபருக்காக விண்ணப்பித்திருந்தால் உங்களுடைய புகைப்பட அடையாளம் (Photo ID), பாஸ்போர்ட் (Passport), ஓட்டுநர் உரிமம் (Driving License) போன்றவற்றை வைத்திருத்தல் அவசியம். டிவிட்டரில் உங்களுடைய கணக்கை Verified-ஆக மாற்ற கீழ்கண்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் பணியாற்ற வேண்டும். அவை,
- Music
- TV
- Film
- Fashion
- Government
- Politics
- Religion
- Journalism
- Media
- Sports
- Business
மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால் நீங்கள் டிவிட்டர் கணக்கை Verified-ஆக மாற்றலாம். ஆனால் பெரும்பாலும் வெரிஃபிகேஷன் லிங்க் (Verification Site) செல்லும் போது பிறகு முயற்சிக்கவும் (Check back soon) என்று காண்பிக்கும். தற்போது டிவிட்டரானது, வெரிஃபிகேஷன் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் முறையாக செயல்பட்டு வரும் பயனாளர்களுக்கு சரிபார்க்கப்பட் கணக்கு (Verified Account) அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு உங்களுடைய கணக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செயல்பாட்டில் இருத்தல் அவசியம். இந்த எளிய வழிகளை பின்பற்றி நீங்களும் டிவிட்டர் மூலம் பிரபலமாகலாம்.