ஆண்டிராய்டு தலத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஜிமெயிலில் புதிய சிறப்பம்சம்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 18, 2018 15:28 ISTTechnology News
நாளொன்றுக்கு 1.4 பில்லியன் பயனாளர்கள் உபயோகப்படுத்தி வரும் கூகுளின் ஜிமெயில் செயலியில் புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் செயலியின் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சம் டெஸ்க்டாப் தலத்தில் வழங்கப்பட்டது. இந்த அப்டேட் மூலம் ஜிமெயிலில் புதிய தீம் (theme) வழங்கப்பட்டுள்ளது. ஜிமெயில் செயலியில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் டெஸ்க்டாப் தலத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆண்டிராய்டு தளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் புதியதாக கான்பிடன்சியல் மோட் (confidential mode) என்ற அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுடைய இரகசிய தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ளப்படும். இத்தகைய ரகசிய மின்னஞ்சலை அனுப்ப, மெயில் கம்போஸ் செய்த பிறகு வலது புறத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள கான்பிடன்சியல் மோட் (confidential mode) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
இதன் பிறகு உங்களுடைய ரகசிய மெயில் குறிப்பிட்ட சில மணிநேரத்திற்கு பிறகு தாமாகவே அழிக்கப்படும். இது தவிர இந்த ரகசிய மின்னஞ்சலை படிக்கும் போது அந்த நபர் ஸ்க்ரீன் ஷாட் (Screen Shot) மற்றும் பிரிண்ட் போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டு விடும். இதன் மூலம் நீங்கள் பாதுகாக்க நினைக்கும் மின்னஞ்சலை சிறப்பான முறையில் பாதுகாக்கலாம். இந்த அம்சமானது தற்போது ஆண்டிராய்டு தளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.