Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்

கூகுள் ஆண்டிராய்டு ஓரியோ அப்டேட்டுக்கு பிறகு அடுத்த வர்சனான ஆண்ட்ராய்டு 9 வர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று நம்முடைய நவீன சூழலில், உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் சம்பவமாக இருந்தாலும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளலாம். இந்த முன்னேற்றத்திற்கு ஆண்டிராய்டு சிறப்பம்சங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கூகுளின் ஆண்டிராய்டு இயங்கு தளம் உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  இதனால் கூகுள் நிறுவனமும் A,B,C,D போன்ற ஆங்கில எழுத்துக்கள் மூலம் உணவு பொருட்களின் பெயரில் இயங்கு தளங்களில் அப்டேட்களை வழங்கி வருகிறது.

ஆல்பா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃரோயோ, ஜிஞ்சர்பிரட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கெட், லாலிபாப், மார்ஸ்மாலோவ், நக்கெட் போன்ற பெயர்களுக்கு பிறகு இறுதியாக ஒரியா (Oreo) என்ற பெயரில் ஆண்ட்ராய்டு 8 வர்சன் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆண்டராய்டு அடுத்த அப்டேட்டான ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பி (Android Pie) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அப்டேட்டின் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

  • Added-colour design
  • Adaptive Battery
  • Updated volume controls
  • Text select magnification
  • Gesture nav mode
  • Flat Recent Apps display
  • 802.11mc Wi-Fi support
இந்த அப்டேட் கூகுளின் Pixel Pixel XL, Pixel 2, Pixel 2 XL மற்றும் Pixel 3 மாடல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் மொபைலின் செயல்திறனை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்க்ரீன் ஷாட், சவுண்ட், ஆப் ஆக்சன்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற பல செயல்பாடுகளில் பல சிறப்பம்சங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் போதே புகைப்படத்தே எடிட், டெலிட் மற்றும் ஷேர் செய்வதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

கூகுளின் ஆண்ட்ராய்டு 9 பெயர் மற்றும் சிறப்பம்சங்கள்