Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

எளிமையான முறையில் வாட்சப்பில் டெலிட் செய்த மெசஜ் புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?

வாட்சப்பில் எளிய முறையில் நீக்கிய தகவல்களை மீண்டும் பெறுவதற்கு எளிய முறையை விளக்கியுள்ளோம்.

வாட்சப் எனப்படும் செய்தி பரிமாற்று செயலி இன்றைய மக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. இந்த செயலியின் மூலம் மக்கள் எளிதில் செய்திகள், படங்கள், விடியோக்கள் போன்றவற்றை உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாமல் மற்றும் வீடு மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றிலும் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த வாட்சப்பில் ஒரு நபர் அனுப்பிய செய்திகள் மற்றும் படங்கள் போன்றவற்றை எளிதில் அகற்றும் வசதியும் உள்ளது. ஆனால் முன்னதாக சில காரணங்களால் டெலிட் செய்த தகவல்கள் ஏதேனும் ஒரு தருவாயில் தேவைப்படும் விதமாக இருக்கும். இது போன்ற சூழலில் டெலிட் செய்த தகவல்களை மீண்டும் கொண்டு வரவும் வாட்சப் செயலியில் வசதிகள் உள்ளது. அதை பற்றி இப்போது பார்ப்போம், 

1. முதலில் வாட்சப்பில் ஒரு செய்தியை டெலிட் செய்வதற்கு, அந்த மெசேஜ் மீது ஒரு சில வினாடிகள் அழுத்தினால் (Long Press) டெலிட் செய்வதற்கான அம்சங்கள் காண்பிக்கப்படும். இதன் மூலம் ஒரு மெசேஜ் மட்டுமல்லாமல் அனைத்து தகவல்களையும் டெலிட் செய்யலாம்.2. பிறகு settings --> Installed Apps --> Whatsapp-ஐ தேர்வு செய்து 'Clear Data' பட்டனை க்ளிக் செய்யவும்.3. பின்னர் Explorer --> Whatsapp --> Databases --> msgstore.db.crypt12 என்ற file-ஐ 'backup-msgstore.db.crypt12' என்ற பெயரில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். 4. இதன் பிறகு மீண்டும் வாட்சப்பை செயலியை க்ளிக் செய்யும் போது 'Agree and Continue' என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களுடைய நம்பரை OTP முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.5. OTP முறையில் பதிவு செய்த பின்னர் உங்களுக்கு 'Restore' ஆப்சன் காண்பிக்கப்படும். தற்போது 'Restore' பட்டனை க்ளிக் செய்தால் உங்களுடைய 'Backup File' இருப்பதாக காண்பிக்கும். பின்னர் 'Next' என்ற பட்டனை க்ளிக் செய்தால் மீண்டும் 'Backup' செய்வதற்கான ஆப்சன் காண்பிக்கும். அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து 'Done' என்ற பட்டனை க்ளிக் செய்யவும். 6. இப்போது நீங்கள் நீக்கிய தகல்வல்கள் மற்றும் செய்திகள் மீண்டும் உங்களுடைய திரையில் காண்பிக்கபடும்.

இப்படி நீங்கள் நீக்கிய செய்திகள் மற்றும் தகவல்களை எளிமையான முறையில் மீண்டும் உங்களுடைய மொபைலில் பெற்று கொள்ளலாம். அவசர காலங்களில் இந்த பயன்பாடு மிகவும் தேவைப்படும். இது போன்று மறுபடியும் இத்தகைய முறையை பின்பற்றாமல் இருக்க வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய வாட்சப் தகவல்களை பேக்கப் செய்து கொள்ளவும்.

எளிமையான முறையில் வாட்சப்பில் டெலிட் செய்த மெசஜ் புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?