Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விண்ணில் பாய்ந்த இந்தியாவின் 100வது செயற்கைகோள்

isro launches its 100th satellite Cartosat 2

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization - ISRO) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமையிடமாக கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்பட்டு வருகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு கே சிவன் என்பவர் தற்போது தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இஸ்ரோ, உலகின் மிக பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இஸ்ரோவின் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுதளம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. இதனை தொடர்ந்து சுமார் 99 செயற்கைகோள்கள் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இஸ்ரோவின் 100 வது செயற்கைக்கோளான கார்டோசாட் -2 வை ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-40 மூலம் வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.

இந்த செயற்கைகோளின் எடை 710 கிலோ. இதனுள் நிறைய நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்கள் உள்ளது. இதன் மொத்த எடையானது 1323 கிலோவாக உள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டில் அமெரிக்கா, கொரியா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 31 செயற்கைகோள்களை சுமந்து சென்றுள்ளது. இந்தியாவின் 100 வது செயற்கைகோளாக விளங்கும் கார்டோசாட் - 2, பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளில் புதிய தொழில் நுட்பங்கள் நிறைந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயிடு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

விண்ணில் பாய்ந்த இந்தியாவின் 100வது செயற்கைகோள்