தமிழகத்தை சேர்ந்த சிவன் அவர்களின் தலைமையில் ஏவப்பட்ட முதல் ஜிசாட்6ஏ செயற்கைகோள்
வேலுசாமி (Author) Published Date : Mar 29, 2018 18:09 ISTTechnology News
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நாட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இஸ்ரோவால் தற்போதுவரை 104 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனைகளை தொடர்ந்து நவீன தொலைத்தொடர்பு சேவைக்கு உதவும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது 'ஜிசாட் - 6ஏ (GSAT-6A)' என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி ஏப்8 என்ற ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
சரியாக இன்று மாலை 4:56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து புறப்பட்ட 17 நிமிடம் 46 வினாடிகளில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டானது தமிழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவன் அவர்கள், இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவருக்கு பொது மக்கள் முதல் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.