Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A சிறப்பு தள்ளுபடி

xiaomi redmi 5a launch date

ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் சியோமி நிறுவனம் தனது அடுத்த படைப்பை வெளியிட்டுள்ளது. சியோமி நிறுவனத்தின் மூலம் வெளிவந்த ரெட்மி, ரெட்மி 4, ரெட்மி 4A , ரெட்மி நோட் 4 ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்ப்பை நிலையில் தற்போது ரெட்மி 5A ஸ்மார்ட் போனை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 5A (Redmi 5A) என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு விதமாக கிடைக்கிறது. ஸ்மார்ட் போன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் என்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என்று இரண்டு விதமாக கிடைக்கிறது. 5,999 மற்றும் 6,999 என இரண்டு விலைகளில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட் போன்கள் அடுத்த மாதம் டிசம்பர் 7-முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மொபைல்கள் mi.com மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் கிடைக்கிறது. இதற்கு முன்னதாக ரெட்மி 5A சீனாவில் அறிமுகப்படுத்தபட்டது. ரெட்மி 4A வின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பான ரெட்மி 5A டார்க் கிரே, ரோஸ் கோல்ட், கோல்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 5A மொபைலை வாங்கும் முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 1000 ருபாய் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5,999 ரூபாய்க்கு கிடைக்கும் ரெட்மி 5A, 4,999 ரூபாய்க்கு வாங்க முடியும். 

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A சிறப்பு தள்ளுபடி