சாம்சங் கேலக்ஸி நோட் 9 வெளியீடு மாதம் மற்றும் புதிய அம்சங்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Apr 02, 2018 20:38 ISTTechnology News
சாம்சங் வாடிக்கையாளர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9 மொபைல் எப்போது ரிலீஸ் ஆகும் மற்றும் அதன் முக்கிய சிறப்பு அம்சங்கள் வெளிவந்த செய்திகள் மிக மகிழ்ச்சி அளிக்கவுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி S9 மற்றும் S9+ மாடல் மிகுந்த எதிர்பார்புடன் இருந்த வாடிக்கையாளர்களை சற்று திருப்தி படத்தவில்லை என்றே கூறலாம். கேலக்ஸி S8 மற்றும் S8+ மாடலின் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வரவிற்காக காத்திருந்த மற்ற கேலக்ஸி S வகை வாடிக்கையாளர்கள் வாங்க முன்வராததால், அதன் விற்பனை சுற்றுமந்தமாகவே உள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கிலும் இதன் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கிறது.
இதை ஈடுகட்டும் வகையில், சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த வரவான கேலக்ஸி நோட் 9 மாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சில புதிய அம்சங்களை அறிமுக படுத்தவுள்ளதாக, செய்திகள் வந்துள்ளது.பொதுவாக ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் கேலக்ஸி நோட் 9 இந்த வருடம் ஜூலை மாதத்தில் வெளியிடக்கூடும் என சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேலக்ஸி நோட் 9 அதிக வேகத்திற்காக குவால்காம் பிராஸசர் 8 கோர்களுடன் 1.77GHz அம்சங்களுடன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான ஓரியோ 8.1.0 வசதியுடன் வரவுள்ளதால், இது மாபெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. நோட் வகை மாடலைகளை உபயோகப்படுத்தும் மற்ற வாடிக்கையாளர்கள் உறுதியாக இதை வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.