வெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்
ராசு (Author) Published Date : Jun 22, 2018 10:56 ISTTechnology News
தற்போது மிகுந்த ஆவலுடன் விரைவில் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலின் புதிய செய்திகள் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது. இதன்படி நேற்று ஐஸ் யூனிவெர்ஸ் (Ice Universe) என்பவர் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலின் முன்பக்க பேனல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ் யூனிவெர்ஸ் (Ice Universe) முன்னதாக வெளியிட்ட சில முக்கியமான சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மாடல்களின் செய்திகள் உண்மையானதாக இருந்ததால், நேற்று வெளியிட்ட செய்தியையும் நம்பும் அளவிற்கு உள்ளது. இந்த வருடத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மாடலை விட சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதற்கேற்றவாறு தற்போது இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக நோட்9 அப்டேட்ஸ் (Note 9 Updates) உள்ளது.தற்போது வெளியாகியுள்ள இந்த முன்பக்க பேனலின் வடிவமைப்பை பார்த்தால், இதற்கு முன் வெளியான நோட் 8 மற்றும் எஸ் 9 போன்று இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியிடும் தேதியையும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் ஜூலையில் அறிவிப்பு வரும் என்று தெரிவிக்கின்றனர்.