Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய சாம்சங் மொபைல் சாதனை

இந்த வருட முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 39 சதவீத புதிய வாடிக்கையாளர்களை கொண்டு முன்னிலையில் உள்ளது.

தற்போதைய மொபைல் உலகில் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு உடனான போட்டி வாடிக்கையாளர்களை ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தில் திக்குமுக்காட வைக்கிறார்கள். இரண்டு நிறுவனமும் நமக்கு நன்கு அறிந்த சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனமும் தான். இவர்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு வகையான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது, அதிக தொழிநுட்ப வசதிகள் கொண்ட 'கேலக்சி எஸ்(Galaxy S)' மற்றும் நோட் வகையில் விலையுர்ந்த  மொபைல்கள் மற்றும் ஓர் அளவிற்கு தேவையான தொழில் நுட்ப வசதிகள் கொண்ட பட்ஜெட் மொபைல்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனமோ விலையுர்ந்த மொபைல் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் வந்த ஆய்வின் படி, அமெரிக்காவில் இந்த வருட காலாண்டில் ஆப்பிள் மொபைலை விட சாம்சங் நிறுவனத்தின் மொபைலை அதிக வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருட காலாண்டில் சாம்சங் நிறுவனம் 39 சதவீத புதிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் நிறுவனமான ஆப்பிள் வெறும் 31 சதவீத புதிய வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் சாம்சங் நிறுவனத்தை விட ஆப்பிள் நிறுவனத்திற்கே அமெரிக்காவில் அதிகம்  உள்ளது.

இந்த வருடமும் சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்தால், ஆப்பிளை விட சாம்சங் முன்னுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காரணம், சாம்சங் நிறுவனத்தின் இரண்டு வகையான வாடிக்கையாளர்கள் மற்றும் சாம்சங் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது. சாம்சங் மொபைலில் கைரேகை சென்சார், முக சென்சார் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற வசதிகள் இருக்கிறது.

ஆனால் ஆப்பிள் மொபைலில் கைரேகை சென்சார் தற்பொழுது இல்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்றளவும் கைரேகை சென்சார் பாதுகாப்பை பயன்படுத்தி கொண்டுள்ளனர், சில வங்கிகள் கைரேகை சென்சார் வசதியை பண பரிமாற்றத்திற்காக பயன்பாட்டில் வைத்துள்ளனர். சாம்சங் நிறுவனம் அடுத்து வெளிவர இருக்கும் நோட் 9 மாடலை சமாளிக்கும் வகையிலும், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறிய பட்ஜெட் மொபைலை அறிமுக படுத்தவுள்ளது. 

ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய சாம்சங் மொபைல் சாதனை