Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது

நேற்று சாம்சங் நிறுவனம் தனது புதிய வடிவமைப்புக்காக காப்புரிமை பெற உள்ள வடிவை, டட்ச் (Dutch) நாட்டின் முக்கிய இணையதளமான MobielKopen வெளியிட்டுள்ளது. photo credit MobielKopen.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மொபைல் தொழில்நுட்பத்தில், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர புது புது வடிவமைப்பையும், அதிக செயல்திறன் மற்றும் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை உருவாக்கி வருகின்றனர். இந்த தொழில் நுட்பங்கள் தற்பொழுது அனைத்து மக்கள் உபயோகிக்கும் வழக்கமான கணினியில் (Computer) உள்ள தொழிநுட்பங்களுக்கு இணையாக உள்ளது. இதில் அளவு மட்டுமே வித்தியாசமாக உள்ளது. கணினிகள் பெரிய அளவிலும் , மொபைல் போன்கள் கைக்கு அடக்கமாகவும் கிடைக்கிறது. ஆனால் கணினியை விட மொபைலின் விலையே அதிகம்.இந்த மொபைல் உலக போட்டியில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை விட விவோ மற்றும் ஒப்போ மொபைல் நிறுவனங்கள் இந்த வருடம் மொபைல் தொழில்நுட்பத்தில் சில சாதனைகளை படைத்துள்ளது. மொபைலின் முன்பக்க வடிவில் முழு தொடு திரையுடன், முன்பக்கத்தில் கைரேகை சென்சார் மற்றும் முன்பக்க கேமிரா வேண்டும் என்றால் வெளியில் வரும் அளவிற்கு வடிவமைத்துள்ளார்கள். இவர்களின் இந்த சாதனை இவர்களைவிட பெரிய முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.நேற்று சாம்சங் நிறுவனம் தனது புதிய வடிவமைப்புக்காக காப்புரிமை பெற உள்ள வடிவை, டட்ச் (Dutch) நாட்டின் முக்கிய இணையதளமான 'MobielKopen' வெளியிட்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்பு அடுத்து வரவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடலின் வடிவமா அல்லது அடுத்த வருடம் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலின் வடிவமைப்பா என்று இன்னும் தெரியவில்லை. இந்த வடிவத்தில் மேல்பகுதியில் கேமரா மற்றும் சென்சார்கள் இருப்பதற்கான எந்த ஒரு தெளிவும் இல்லை. கீழ் பகுதி முற்றிலும் தொடு திரையாக உள்ளது. இந்த வடிவின் மூன்று பக்கங்களிலும் எந்த ஒரு பட்டன்களும் இல்லை. இந்த வடிவத்தில் கைரேகை சென்சார் முன்பக்கம் வர அதிக வாய்ப்புள்ளது. இதில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் அகற்றப்பட்டுள்ளது. அது பாட்டு கேட்கும் 3MM ஜாக் பின். வருங்காலம் வயர்லெஸ் (wireless) தொழிநுப்டபம் என்பதால், இது வரவேற்க வேண்டியது. ஏற்கனவே மொபைல் சார்ஜ் செய்வதை வயர்லெஸ் (wireless) தொழில்நுட்பத்தில் சாம்சங் அறிமுக படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சார்ஜ் செய்யும் பகுதியும் பிற்காலத்தில் அகற்ற வாய்ப்புள்ளதை நாம் அறியலாம்.

சாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது