Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மனிதர்களின் மூளையில் இருக்கும் பழைய தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி

மனிதர்களின் நினைவுகளில் இருக்கும் தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

நம்மில் பல பேருக்கு தீய நினைவுகளால் இரவில் தூக்கமில்லாமலும், மன உளைச்சலாலும் அவதிப்பட்டு வருகின்றனர். நாம் ஒவ்வொரு நாளும் கண்கள் மூலம் பார்க்கும் அனைத்து காட்சிகளும் ஒரு நினைவாக மூளையில் பதிவாகிறது. தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வாளர்கள் புது புது சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மனிதர்களின் மூளை குறித்த ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

மனிதர்கள் மூளையில் எந்தெந்த நினைவுகள் எப்படி பதிவு செய்யப்படுகிறது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்விட்சர்லாந்து ஆய்வாளர்கள் எலிகளை வைத்து நரம்பியல் சோதனை மூலம் பழைய நினைவுகளை மறக்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் சோதனை செய்யப்பட்ட எலிக்கு பழைய நினைவுகள் அகற்றப்பட்டு அதற்கு இருக்கும் அச்ச உணர்வு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் டென்டெட் கிராஸ் (Dentate Gyrus) என்ற நியூரான்களை கட்டுப்படுத்துகின்றனர். இதனால் மனிதர்களின் மூளையில் இருக்கும் பழைய நினைவுகள் அகற்றப்பட்டு நிம்மதியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றிக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் பழைய நினைவுகளை மறக்கடிக்கும் கருவியை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மனிதனின் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சாதனையாகும்.

மனிதர்களின் மூளையில் இருக்கும் பழைய தீய நினைவுகளை நீக்கும் புதிய கருவி